கோவை மாவட்டம் இருகூர் அருகே காரில் இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடத்தப்பட்ட இளம் பெண் யார் என்பது தொடர்பாகவும், வெள்ளை நிற காரில் வந்து கடத்திய நபர்கள் யார் என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இளம் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கோவை மாவட்டம் இருகூர் தீபம் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை வெள்ளை நிற காரில் வந்த சில நபர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் உடனடியாக தகவல் கொடுத்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இளம் பெண் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் அந்த வெள்ளை நிற காரானது எங்கு சென்றது என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர்.

இளம் பெண் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெண் காரில் கடத்திச் சொல்லப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் பெண் விவரித்த ஆடியோ வெளியாகியுள்ளது. கடத்திச் செல்வது போல் இல்லை என்றும் சண்டை போடுவது போல் தான் சத்தம் கேட்டது எனவும் தெரிவித்துள்ளார். காரின் ஓட்டுனர் இருக்கையில் இருந்த நபர் பெண்ணின் கழுத்தை நெறித்தார் என்றும் காரின் பின்னிருக்கையில் ஒருவர் இருந்தார் என்றும் கழுத்தை நெரித்ததால் பெண் கூச்சலிட்டார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நல்லாட்சியா? சாபக்கேடு… கயமைக் கழுகுகளிடம் பெண்களை பலி கொடுக்கும் திமுக… கொந்தளித்த நயினார்..!
தான் கூச்சலிட்டதும் வேகவேகமாக காரை எடுத்துச் சென்றதாகவும் கதவை வேகமாக சாத்திய போது தான் பின் இருக்கையில் ஒருவர் இருந்தது தனக்கு தெரியும் எனவும் கூறினார். தான் அழைத்த போது யாரும் அங்கு வரவில்லை என்றும் கூட்டில் வந்த ஒரு பெண் மட்டுமே வாகனத்தை நிறுத்தி என்ன நடந்தது என்று கேட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை சம்பவத்தில் தாமதம் ஏன்? என்ன நடக்குது முதல்வரே..? சந்தேகத்தை கிளப்பும் இபிஎஸ்..!