தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்தன. குறிப்பாக, அதிமுக ஆட்சி அமைத்தால் அது கூட்டணி ஆட்சியாக இருக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறுவதாக வெளியான தகவல்கள், இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவை சந்தேகத்திற்குரியதாக்கியுள்ளன. ஆனால், இந்தக் கூற்றுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆட்சியிலும் பங்கு பெறுவோம் என் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. 60 ஆண்டுகளாக ஏதாவது ஒரு கட்சியில் கூட்டணி வைத்து சாறை அவர்கள் குடித்து விடுகிறார்கள் என்றும் சக்கையை நாங்கள் பார்க்கும் சூழ்நிலைதான் உள்ளது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதிக இடங்களில் போட்டியிடுவோம் என்றும் அரசாங்கத்திலும் ஆட்சியிலும் நாங்கள் பங்கு பெறுவோம் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எனவும் கூறினார் . NDA கூட்டணியை விமர்சித்து வந்த நிலையில், இந்தியா கூட்டணியில் கூட கூட்டணி ஆட்சி விவகாரம் தலைதூக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை ஒன் செயலி மூலம் டிக்கெட் எடுக்குறீங்களா? ரயில்வே துறையின் அதி முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில், கூடுதல் தொகுதி தொடர்பாக கே.எஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். கூடுதல் தொகுதி தாருங்கள் என கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை என கூறினார். பசிக்கிறது இன்னும் கொஞ்சம் சோறு தாருங்கள் என தாயிடம் குழந்தை கேட்பதை போல் தான் கூடுதல் தொகுதி கேட்பதும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
இதையும் படிங்க: ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்... முதல்வர் பெருமிதம்...!