தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை ஊரான குலசேகரன்பட்டினத்தில், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் நடைபெறும் உலகப் புகழ் தசரா பெருவிழா, இந்தியாவின் மைசூர் தசராவுக்கு இணையாக 2025-ஆம் ஆண்டும் கோலாகலமாக நடைபெறுகிறது. செப்டம்பர் 23 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த 10 நாட்கள் திருவிழா, அக்டோபர் 2 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் மூன்றாம் தேதி அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வரும் இந்த விழா, பக்தி, கலை, கலாச்சாரத்தின் அழகிய சங்கமமாகத் திகழ்கிறது.

300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், குலசேகர மன்னரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. மகிஷாசூரன் எனும் அரக்கனை அழித்த அம்மனின் வீரத்தை ஞாபகம் செய்வதே இத்திருவிழாவின் சாரம். நவராத்திரி தினங்களில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா செல்கிறார். முதல் நாள் சிம்ம வாகனத்தில் துர்கை அம்மன் திருக்கோலத்தில், இரண்டாம் நாள் காளி வாகனத்தில், மூன்றாம் நாள் கமல வாகனத்தில் என 10 வகை வாகனங்கள் இடம்பெறுகின்றன. இன்று (செப். 30) ஏழாம் நாள் விழா, அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் காட்சி அளித்தார்.
இதையும் படிங்க: பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை.. தாலிபான் அரசு அதிரடி..!!
இந்நிலையில் தசரா திருவிழாவை முன்னிட்டு வரும் 2, 3 ஆகிய இரண்டு நாட்கள் திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிக்கு செல்வதற்கும் பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கும் கனரக வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம் ஈசிஆர் ரோடு வழியாக மணப்பாடு, பெரியதாழை, உவரி மார்க்கமாக கன்னியாகுமரி செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் குலசேகரன்பட்டினத்தை தவிர்த்து, அதற்கு பதிலாக திருச்செந்தூர், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், மணிநகர், படுக்கப்பத்து மார்க்கமாக பெரியதாழை வழியாக கன்னியாகுமரி செல்லவும் அல்லது சாத்தான்குளம், திசையன்விளை மார்க்கமாக கன்னியாகுமரி செல்லவும்.
அதேபோல் கன்னியாகுமரி, பெரியதாழை, மணப்பாடு ஈசிஆர் ரோடு வழியாக குலசேகரன்பட்டினம் மார்க்கமாக திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் குலசேகரன்பட்டினத்தை தவிர்த்து அதற்கு பதிலாக பெரியதாழை ஈசிஆர் ரோடு வழியாக படுக்கப்பத்து, மணிநகர், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் செல்லவும் அல்லது கன்னியாகுமரி, உவரி, திசையன்விளை, சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் வழியாக திருச்செந்தூர் செல்லவும்.

எனவே அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தசரா திருவிழாவை சிறப்பாகவும் நடத்திட காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: Hamburger, Ice cream-னு சொல்லக்கூடாது!! வட கொரிய அதிபரின் புது ஆர்டர்!! வெளங்கும்!