தமிழ் இசையின் ஜாம்பவான் இளையராஜா, தனது 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் செப்டம்பர் 13, 2025 அன்று சென்னையின் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழா, தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. இசைஞானியின் சாதனைகளை கொண்டாடும் இந்த விழா, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல உயர்ந்த திரைதளங்கள் பங்கேற்றனர். லண்டனில் நடைபெற்ற சிம்பொனி இசைநிகழ்ச்சியைத் தொடர்ந்து, இந்த பாராட்டு விழா அவரது பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் மிகப்பெரிய அளவிலான நிகழ்வாக அமைந்தது. முதல்வர் ஸ்டாலின், இளையராஜாவின் இசை தமிழின் அடையாளம் என்று பேசி, அவருக்கு நினைவு விருது வழங்கினார். கமல்ஹாசன் தனது உரையில், இளையராஜாவின் இசையை முதல்வரின் ரசனையின் அடிப்படை என்று விளக்கி, விழாவின் சிறப்பை உயர்த்தினார்.

பாராட்டு விழாவில் இளையராஜா சிம்பொனியை அரங்கேற்றினார். இந்த நிலையில், பாஜக மாநில துணை தலைவர் குஷ்பூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தான் நடப்பதாக குற்றம் சாட்டினார். சமீபத்தில் இளையராஜாவின் பாராட்டு விழாவில் கூட முன்வரிசையில் முதலமைச்சரின் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் அமர்ந்திருந்ததாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஒரே பாமக தான்... அன்புமணியே தலைவர்! திலகபாமா பரபரப்பு பேட்டி
பெண்களைப் பற்றி பெருமையாக பேசுகிறார்கள் ஆனால் இளையராஜாவின் பாராட்டு விழாவில் ஏன் பெண்கள் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அவர் இசையில் பெண்கள் பாடவே இல்லையா என்று கேள்வி எழுப்பிய குஷ்பூ, திமுக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு எதுவும் தெரியாதா? அது அவரோட ஸ்டைல்! பிரேமலதா ஓபன் டாக்..!