விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர மாநிலத் துணை முதலமைச்சர் அஜித் பவாரின் (66) உடல், இன்று அவரது சொந்த ஊரான பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்துவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாராமதிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

இன்று காலை 11:00 மணியளவில் பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. முன்னதாக, பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் அதே மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்கத் தங்களது தலைவருக்குப் பாராமதியில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “இரட்டை எஞ்சின் அல்ல... அது டப்பா எஞ்சின்!” மதுராந்தகம் மேடைக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த முதலமைச்சர்!
பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருடன் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பல்வேறு மாநிலத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்
நேற்று காலை 8:45 மணியளவில் மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்றபோது நிகழ்ந்த இந்த விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமான விபத்து புலனாய்வுப் பணியகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.
அஜித் பவாரின் மறைவையொட்டி மகாராஷ்டிராவில் ஏற்கனவே மூன்று நாள் அரசுமுறைத் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஒரே மேடையில் 12 தலைவர்கள்” - தமிழகத் தேர்தல் களத்தை அதிர வைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மெகா சங்கமம்!