மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், இரட்டை எஞ்சின் அரசு இருந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். பிரதமரின் இந்தப் பேச்சுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான மற்றும் கிண்டலான பதிலடியைக் கொடுத்துள்ளார். உங்கள் டப்பா எஞ்சின் நுழையாத மாநிலங்கள்தான் இந்தியாவிலேயே வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்கின்றன என்று அவர் சாடியுள்ளார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு அவர் எழுப்பியிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்காததைச் சுட்டிக்காட்டிய முதல்வர், பாஜக ஆளும் மாநிலங்களைவிட, பாஜக ஆட்சி செய்யாத தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள்தான் கல்வி, மருத்துவம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முதன்மையாக உள்ளன. உங்கள் இரட்டை எஞ்சின் முழக்கம் என்பது மாநில உரிமைகளை நசுக்கி, அந்த எஞ்சின்களைத் துருப்பிடிக்க வைக்கும் செயலாகும்" என விமர்சித்துள்ளார். இது இரட்டை எஞ்சின் அல்ல, மாநிலங்களின் வளர்ச்சியையே பின்னுக்குத் தள்ளும் டப்பா எஞ்சின் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதுராந்தகம் கூட்டத்தில் அதிமுக மற்றும் இதர கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கைகோர்த்துக் காட்டியதை விமர்சித்த முதல்வர், ஊழல் மற்றும் துரோகங்களின் கூட்டணிக்காகத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ் வேட்டி கட்டி வந்து நாடகமாடும் பிரதமரின் பாச்சா இங்குப் பலிக்காது" எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையால் இன்று ஜி.எஸ்.டி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் குறிப்பிட்ட முதல்வர், மக்களுக்கு இடையூறு கொடுத்துக் கூட்டம் நடத்துவதுதான் உங்கள் வளர்ச்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே மேடையில் 12 தலைவர்கள்” - தமிழகத் தேர்தல் களத்தை அதிர வைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மெகா சங்கமம்!
இதையும் படிங்க: பராக்கிரம தினம் இன்று: நேதாஜிக்கு பிரதமர் மோடி உருக்கமான புகழஞ்சலி..!!