காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இதை முன் நின்று நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பின்னால் இருந்து இயக்கியது பாகிஸ்தான் ராணுவமும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் தான் என்று என்.ஐ.ஏ தெரிவித்து உள்ளது. எனவே தான் பயங்கரவாதிகளுக்கு சோறு போட்டு வளர்க்கும் பாகிஸ்தானை பந்தாட அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, வர்த்தக உறவு துண்டிப்பு என்று ராஜதந்திர மற்றும் வர்த்தக ரீதியிலான தொடர்புகளை இந்தியா துண்டித்து வருகிறது. பாகிஸ்தான் கொடியுடன் கூடிய எந்த ஒரு வர்த்தக கப்பல்களும், இந்திய துறைமுகங்ளுக்குள் நுழைவதற்கு தடை விதித்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு போட்டியாக, இந்திய கொடியுடன் கூடிய எந்த ஒரு சரக்கு கப்பல்களும் தங்களுடைய துறைமுகங்களுக்குள் வருவதற்கு தடை விதிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இதையும் படிங்க: அடங்காமல் அத்துமீறும் பாக்., 11வது நாளாக தொடரும் துப்பாக்கிச்சூடு.. இந்திய ராணுவம் தக்க பதிலடி..!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் இறங்கும் அனைத்து வகையான பொருட்களின் இறக்குமதிக்கும் இப்போது இந்தியா அதிரடியாக தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நம் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது எந்த வகையிலும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் இனி எந்த பொருட்களும் வர முடியாது. இதற்கான தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்து விட்டது.

ஏற்கனவே அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அப்படி இருக்கும் போது, தன்னிடம் உள்ள சிமென்ட், ஜவுளி மற்றும் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் மேலும் பாகிஸ்தான் இழப்பை சந்திக்கும் நிலை இப்போது உருவாகி உள்ளது. இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. இதேபோல் இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது.

இதனால் பதற்றத்தில் உறைந்து போன பாகிஸ்தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், துாதர்கள், ராணுவ அதிகாரிகள் என, பலரும், பயத்தில் உளறி வருகின்றனர். இந்தியா தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் நடத்துவோம் என கூறி வருகின்றனர்.அந்த வரிசையில், ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் துாதர் முகமது காலித் ஜமாலி இணைந்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் பல உளவு தகவல்களும் இதை உறுதி செய்வதாக உள்ளது. அதனால், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துவது என்பது எந்த நேரத்திலும் நடக்கலாம். அவ்வாறு நடந்தால், நாங்கள் எங்களுடைய முழு பலத்தையும் பயன்படுத்துவோம். வழக்கமான ஆயுதங்களுடன், அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என அவர் கூறினார்
இதையும் படிங்க: மரண அடி.. பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைத்தது இந்தியா.. பாக்லிஹார் அணை நீர் நிறுத்தம்..!