மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டிலிருந்து காலியாகும் ஆறு இடங்களுக்கான போட்டி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் தேர்தல் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஆளும் திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது.
தற்போதைய ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 அன்று முடிவடைகிறது. இதில் திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு ஆகியோரும், அதிமுகவின் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸின் ஜி.கே. வாசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

திமுக சார்பில் நான்கு வேட்பாளர்களும், அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுகவை பொருத்தவரை இரண்டு சீட்டுகளை தனது கட்சி உறுப்பினர்களுக்கு ஒதுக்கியும், மற்ற இரண்டு இடங்களை காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கும் ஒதுக்கியது. திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் கிரிஸ்டோபர் திலக் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ராஜ்யசபா எலெக்ஷன்... முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!!
தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளரும் பிரேமலதா விஜயகாந்த் சகோதரருமான L.K. சுதீஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுவுடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று ஆசி பெற்ற சுதீஷ், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின் போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆ. ராசா உட்பட திமுக கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: #BREAKING: ராஜ்யசபா தேர்தல்... முதல்வர் முன்னிலையில் திமுக உறுப்பினர்கள் வேட்புமனுத் தாக்கல்..!!