மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டிலிருந்து காலியாகும் ஆறு இடங்களுக்கான போட்டி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் தேர்தல் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஆளும் திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது. தற்போதைய ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 அன்று முடிவடைகிறது.
இதில் திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு ஆகியோரும், அதிமுகவின் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸின் ஜி.கே. வாசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், திமுக தனது வேட்பாளர்களை மார்ச் 4, 2026 அன்று அறிவித்தது. கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இரண்டு வேட்பாளர்களை கட்சி தேர்ந்தெடுத்தது. அவர்கள் திருச்சி என். சிவா மற்றும் பேராசிரியர் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோராவர். திருச்சி சிவா ஏற்கனவே நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர். இம்முறை வெற்றி பெற்றால் அவர் ஐந்தாவது முறையாக மாநிலங்களவைக்கு செல்லும் சாதனை படைப்பார். அவரது நீண்ட நாடாளுமன்ற அனுபவம் கட்சிக்கு வலுவான பிரதிநிதித்துவத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்சியில் மாபெரும் திமுக மாநாடு.. எதிரிகளுக்கு ஒரே நடுக்கம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!
மறுபுறம், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் திமுகவின் முக்கிய பேச்சாளராகவும், ஊடகம் மற்றும் பொது உறவுகள் பிரிவின் செயலராகவும் பணியாற்றுபவர். அவருக்கு இது முதல் முறை மாநிலங்களவை வாய்ப்பு. மற்ற 2 இடங்களை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கும் இட ஒதுக்கீடு செய்தது. இந்திய தேசிய காங்கிரஸுக்கு ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திருச்சி சிவா மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரைத்தொடர்ந்து கான்ஸ்டடைன் ரவீந்திரனும் தனது வேட்பு மனுவை முதல்வர் முன்னிலையில் தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது துரை வைகோ உள்ளிட்ட திமுக இந்த நிகழ்வின் போது திமுக கூட்டணி கட்சியினரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: சூடுபிடித்த பார் கவுன்சில் எலெக்ஷன்... திமுக M.P. கிரிராஜன் வேட்பு மனு தாக்கல்..!!