ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர், முந்தைய திமுக ஆட்சியில் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வீரமணியை தப்பிக்க விட்டுவிட்டதாக பொதுவெளியில் குற்றம்சாட்டியிருந்தனர்.
தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் திமுகவின் மதிப்பைக் குறைக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கருதிய கட்சி, அவதூறு வழக்கு தொடர முடிவு செய்தது.திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 2025 அக்டோபர் 6 ஆம் தேதி வீரமணி மீதான புகார் கிடைத்த மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், எந்தத் தலையீடும் இல்லாமல் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

அமைச்சர்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு உண்மைக்கு மாறான கருத்துகளைப் பரப்பி திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது. இதற்காக ரூ.1.01 கோடி மானநஷ்டஈடு வழங்கவும், மேலும் இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தொடரக்கூடாது எனத் தடை விதிக்கவும், சமூக வலைதளங்களில் உள்ள தொடர்புடைய பதிவுகளையும் காணொளிகளையும் நீக்கவும் கோரப்பட்டது.சமூக வலைதள நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் வெளிநாட்டில் அமைந்துள்ளதாலும், தவெக தலைமை அலுவலகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதாலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கோரி தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: விசாரணையின்றி டாஸ்மாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி, அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய திமுகவிற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் ஜி.கே. முத்துகுமார் அமர்வில் முறையிடப்பட்டது.
இதையும் படிங்க: ரூ.1 கோடி நஷ்ட ஈடு..? தவெக அமைச்சர்களுக்கு செக்... வழக்கு தொடர திமுகவுக்கு கிரீன் சிக்னல்..!!