• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு! மத்திய அரசின் முடிவால் தமிழகத்தில் அதிர்ச்சி!

    மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
    Author By Pandian Sun, 26 Jul 2026 09:06:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-coimbatore-metro-rail-project-rejected-again-by-central-government-latest-update

    மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இரண்டாவது முறையாக பரிந்துரை செய்த நிலையிலும், திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    சென்னையில் கடந்த 2015 முதல் மெட்ரோ ரயில் சேவை வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதேபோன்ற திட்டத்தை மதுரை மற்றும் கோவையிலும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரு நகரங்களுக்கும் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து தமிழக அரசிடம் வழங்கியது. பின்னர் அந்த அறிக்கைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைத்தது.

    மதுரையில் திருமங்கலம் முதல் யானைமலை ஒத்தக்கடை வரை சுமார் 31.93 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் பெரும்பகுதி உயர்மட்ட பாலம் வழியாகவும், ஒரு பகுதி சுரங்கப் பாதையாகவும் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. மொத்தம் 23 மெட்ரோ நிலையங்களுடன் இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.11,360 கோடியாக கணக்கிடப்பட்டது.

    இதையும் படிங்க: சொத்துக்களுக்கு அடையாள அட்டை திட்டம்! 6 மாநிலங்களில் முடக்கம், தமிழகத்தின் நிலை என்ன?

    3CoimbatoreMetro

    அதேபோல், கோவையில் அவிநாசி சாலை–கருமத்தம்பட்டி மற்றும் உக்கடம்–வலியம்பாளையம் வரை சுமார் 39 கிலோமீட்டர் நீளத்தில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவையை இயக்க திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தில் 32 நிலையங்கள் இடம்பெறவுள்ளதுடன், ரூ.10,740 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

    முன்னதாக, திட்ட அறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, மெட்ரோ திட்டம் செயல்படுத்த வேண்டிய தகுதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டி கோப்புகளை திருப்பி அனுப்பியிருந்தது. குறிப்பாக, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ திட்டம் பொருத்தமானது என்ற நிபந்தனையை குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், கடந்த மே மாதம் தமிழக அரசு திருத்தங்களுடன் மீண்டும் பரிந்துரை செய்திருந்தாலும், மதுரை மற்றும் கோவையில் தற்போதைய மக்கள்தொகை மற்றும் பயணிகள் தேவை மெட்ரோ திட்டத்திற்கு போதுமானதாக இல்லை என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், இந்த நகரங்களில் மெட்ரோவுக்கு பதிலாக பேருந்து போக்குவரத்தை நவீனப்படுத்தி மேம்படுத்துவது நடைமுறைக்கு ஏற்ற தீர்வாக இருக்கும் என்றும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை இறுதி நிலை தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு!! 8 மாத கர்ப்பம்! 19 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

    மேலும் படிங்க
    போலி ஆவணத்தில் சிம் கார்டு வாங்கினால் 3 ஆண்டுகள் சிறை! ரூ.50 லட்சம் அபராதம் என மத்திய அரசு எச்சரிக்கை!

    போலி ஆவணத்தில் சிம் கார்டு வாங்கினால் 3 ஆண்டுகள் சிறை! ரூ.50 லட்சம் அபராதம் என மத்திய அரசு எச்சரிக்கை!

    இந்தியா
    ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் புதினின் யுனைடெட் ரஷ்யா கட்சி அபார வெற்றி! 355 இடங்களை கைப்பற்றி சாதனை!

    ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் புதினின் யுனைடெட் ரஷ்யா கட்சி அபார வெற்றி! 355 இடங்களை கைப்பற்றி சாதனை!

    உலகம்
    சேவல் சண்டைக்கு தடை இல்லை..! முறைப்படுத்தும் சுற்றறிக்கை... உயர்நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம்.!!

    சேவல் சண்டைக்கு தடை இல்லை..! முறைப்படுத்தும் சுற்றறிக்கை... உயர்நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம்.!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க முடியாது! ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

    தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க முடியாது! ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு! அரசியல் கடந்து ஆதரவு தர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

    நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு! அரசியல் கடந்து ஆதரவு தர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையில் பரபரப்பு.. ஆய்வுக்கு வந்த அமைச்சரை ரவுண்டு கட்டிய நோயாளிகள் உறவினர்கள்...!

    அரசு மருத்துவமனையில் பரபரப்பு.. ஆய்வுக்கு வந்த அமைச்சரை ரவுண்டு கட்டிய நோயாளிகள் உறவினர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share