மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால், மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில், மீண்டும் அதே தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிடும் மரகதம் குமரவேல், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
அவரது பிரசாரத்தின்போது சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வீராணக்குன்னம் பகுதியில் பிரசாரத்துக்கு சென்றபோது ஒரு தரப்பினர், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்றும், தற்போது மீண்டும் வாக்கு கேட்டு வருவது குறித்தும் கேள்வி எழுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் பதவி! 15 புதிய துணை பொதுச் செயலாளர்களை நியமித்தார் முதல்வர் விஜய்!
மரகதம் குமரவேலுக்கு எதிராக ஏற்கெனவே தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
இதனிடையே, திமுக மற்றும் அதிமுக தரப்பினர் இணைந்து தன்னை தோற்கடிக்க சதி செய்வதாக மரகதம் குமரவேல் குற்றம்சாட்டியுள்ளார். தங்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று மதுராந்தகம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இருப்பினும், இன்று தவெகவினரை வாக்கு சேகரிக்க விடாமல் மதுராந்தகம் மக்கள் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவம்பாக்கம் ஊராட்சியில் கொளத்தூர் கிராமத்தில் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியால் கல்லை உடைக்க வெடி வைக்கும் பொழுது பொதுமக்களுக்கு மிகப்பெரிய சப்தத்துடன் கூடிய நிலஅதிர்வு மற்றும் கற்கள் வீட்டின் மீது வந்து விழுந்து வீடுகள் மற்றும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கல்குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனது. விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் கொளத்தூர் கிராம மக்கள் கல கல்குவாரியை மூடக்கோரி லாரியை சிறைபிடித்து பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னர் தற்காலிகமாக குவாரி மூடப்பட்டது..
ஆனால் இன்று இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்று கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்காத இப்பொழுது ஓட்டு மட்டும் கேட்க வருகிறீர்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கல்குவாரி மூட நடவடிக்கை எடுத்தார் என தகவலை கூற பொதுமக்கள் வாக்குவாதம் செய்து நாங்கள் போராடிய அரசு அதிகாரிகள் கொண்டு தற்காலிகமாக மூடினோம். பொய்யான தகவலை சொல்லி ஓட்டு கேட்க வரீங்க அப்படின்னு சொல்லி கேள்வி மேல கேள்வி கேட்டு பொதுமக்கள் வாக்கு சேகரிக்க வந்தவர்களை விரட்டி அடித்தனர்.
இதையும் படிங்க: ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!