தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றவர் கடலூர் அஞ்சலை அம்மாள். 1890 ஜூன் 1 அன்று கடலூரில் பிறந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தென்னிந்தியாவின் முதல் பெண்மணியாக பங்கேற்றவர். கள்ளுக்கடை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சிறை சென்றவர்.
“தென்னிந்தியாவின் ஜான்சி ராணி” என்று காந்தியடிகளால் பாராட்டப்பட்ட இந்த வீரமங்கை, அரசியலை சேவையாகக் கருதி தன் வாழ்நாளை மக்கள் நலனுக்காக அர்ப்பணித்தார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பேத்தி மங்கையர்க்கரசி முன்வைத்துள்ள வேண்டுகோள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அஞ்சலை அம்மாளின் பிறந்தநாளான ஜூன் 1 அன்று, கடலூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று மங்கையர்க்கரசி வலியுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அஞ்சலை அம்மாளை ஏற்றுக்கொண்டது தனக்கு பெருமையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் ராஜினாமா எதிரொலி..! திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!
இந்த அறிவிப்பு தவெகவின் மாநாட்டில் விஜய் செய்தபோது, அஞ்சலை அம்மாளின் வரலாறு பலருக்கும் புதிய அறிமுகமாக அமைந்தது. அவரது தியாகங்கள், காந்திய சித்தாந்தங்களுக்கு ஏற்ப மது ஒழிப்பு, சேவை மனப்பான்மை போன்ற கொள்கைகளை மங்கையர்க்கரசி வலியுறுத்தி வருகிறார். சேவை மனப்பான்மையை தவெக தலைவர் விஜய் தன் அரசியலில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இளைஞர்களிடையே மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மங்கையர்க்கரசி தெரிவித்தார்.
இதையும் படிங்க: "SOFA பிரச்சனை"..! உதயநிதி விமர்சனத்திற்கு டாட் வைத்த திருமா..!