காவிரி நதியின் குறுக்கே கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை கண்டித்தும், மத்திய அரசு அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிரம்மாண்ட அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தலைமையில் இந்தப் போராட்டம் அமைந்தது.
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்ற ஆணவமான அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. வைகோ இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக அரசின் இந்த முயற்சி உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டினார்.

மேகதாது அணை கட்டப்பட்டால் 68 டி.எம்.சி. தண்ணீர் தேக்கும் திறன் கொண்ட இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பாசனத் தேவையை பெரிதும் பாதிக்கும், மேட்டூர் அணைக்கு வரும் நீர் அளவு குறையும், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்று எச்சரித்தார். மத்திய அரசு கர்நாடகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், தமிழ்நாட்டின் நலனை புறக்கணிப்பதாகவும் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: திமுக கூட்டணிக்கு GOODBYE.? துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி..! மனம் திறந்த துரை வைகோ..!!
இந்தத் திட்டம் நிறைவேறினால் தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் மற்றும் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதே முக்கிய வாதம். மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடகா அரசு எதிராக கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி முறிவா.? 27 ஆம் தேதி கூடுகிறது மதிமுக பொதுக்குழு..! பரபரக்கும் அரசியல்..!