மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரம் 98 கிராமமக்களை வனத்துறை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை முதல் உணவு சமைத்து தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் போராட்டத்திற்கு தயாராகும் கடமலைகுண்டு பேருந்து நிலைய வளாகம்
வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தேனிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடிப்படை காவல்குழுவினர் உள்ளிட்டோர்களுடன் பாதுகாப்புபணியில் ஈடுபட தயாராகி வருகின்றனர்
போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் கடமலைக்குண்டு வருசநாடு சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து மாற்றி அமைத்து, மேலப்பட்டி வழியாக வெள்ளிமலை சாலையில் சென்று சுற்றி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை இயக்க காவல்துறை ஏற்பாடு
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் பதவி! 15 புதிய துணை பொதுச் செயலாளர்களை நியமித்தார் முதல்வர் விஜய்!
தொடர்ச்சியாக போராட்டத்தை கண்காணிக்கும் வகையில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு கேமிராக்களும் கடமலைக்குண்டு பேருந்து நிலைய வளாகத்தை சுற்றி வைக்கப்படுகிறது
ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி தேனி மாவட்டத்தில் உள்ள 98 கிராம மக்களை வனத்துறை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை முதல் கடமலைக்குண்டு பேருந்து நிலைய வளாகத்தில் வருசநாடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மலை கிராமமக்கள் பெரும் திரளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உணவுசமைத்து தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக 29ஆம் தேதி மீண்டும் விசாரணை வரவுள்ள நிலையில் 4 நாட்களாக தொடர்ச்சியாக நடத்த உள்ள நிலையில், இந்த போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலை கிராமமக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடமலைக்குண்டு பேருந்துநிலைய வளாகத்தில் மலைகிராம மக்கள் வனஉரிமை குழுவை சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டத்திற்காக சாமியான பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு அங்கு வரவுள்ள மக்களுக்காக குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் ஏற்பாடு செய்து வருகின்றனர்
மறுபுறம் தேனிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அதிரடிபடை காவலர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதற்காக காவலர்கள் தங்குவதற்கு தனியாக இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது
தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசலை தடுத்திடும் வகையில், கடமலைக்குண்டு வருசநாடு சாலையில் நாளை காலை முதல் போக்குவரத்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு
தேனியில் இருந்து கடமலைக்குண்டு நோக்கி வரும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் கடமலைக்குண்டு பகுதிக்கு முன்பாக மேலப்பட்டி பகுதியிலேயே பிரிந்து வெள்ளிமலை சாலையில் சென்று மயிலாடும்பாறை வழியாக சென்றுவிடும் வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது
மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் இரண்டுபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே சோதனைசாவடி அமைத்து வாகனங்களை நிறுத்திவிட்டு போராட்டத்திற்கு செல்லும் மக்கள் நடந்துசெல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தொடர்ச்சியாக காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ள கடமலைக்குண்டு பேருந்துநிலைய வளாகத்தை சுற்றி காவல்துறை சார்பில் பாதுகாப்பு கேமிராக்கள் பொருத்தப்படுகிறது
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் வருகிற 29ஆம் தேதி வரும் விசாரணை தங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என்றும், தமிழக அரசு மறுசீராய்வு மனு இந்த விஷயத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வனத்துறையின் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு மலைகிராமங்களில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படவேண்டும், தொடர்ச்சியாக போராடிவரும் இந்த மலை கிராமமக்களுக்கு பட்டாவழங்கி இவர்களுக்கு வாழ்வுரிமை பாதுகாக்கபட வேண்டும் என்றும் வலியுறுத்தி நாளை காலை முதல் தொடர்ச்சியாக உணவு சமைத்து காத்திருப்பு போராட்டம் பெரும்திரளாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!