தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து எழுப்பப்படும் மின்வெட்டு குற்றச்சாட்டுகள் மாநில அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன. 2026 மே மாதம் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற பிறகு, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களிலும், திருநெல்வேலி, திருச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இரவு நேரங்களில் மணிக்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சில இடங்களில் மின்னழுத்தம் குறைவாக இருப்பதாலும், மின்சாரம் மீண்டும் வருவதில் தாமதம் ஏற்படுவதாலும் வீடுகள், சிறுதொழில்கள், மாணவர்கள் ஆகியோர் அவதிப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இதனால் பல பகுதிகளில் மக்கள் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.எதிர்க்கட்சிகள் இந்த நிலையை ஆட்சியின் தோல்வியாக சுட்டிக்காட்டுகின்றன. திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர், தவெக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின்வெட்டுகள் அதிகரித்துள்ளதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுடன் இணைத்து குற்றம் சாட்டுகின்றனர். அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் மக்கள் தெருக்களில் இறங்கி போராடுவதாகவும், அரசு இதற்கு உரிய தீர்வு காணாமல் தவறான விளக்கங்களை அளிப்பதாகவும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.

அதிமுக மற்றும் அமமுக தலைவர்களும் அரசின் திட்டமிடாத நிர்வாகத்தை கண்டித்துள்ளனர். அரசு உயர் மின் தேவையை சமாளிக்கத் தவறியதாகவும், பழைய உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகியவை பிரச்சினையை அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.இந்தச் சூழலில் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் மின்வெட்டு ஏற்படும் சம்பவங்கள் அரசுக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!
இந்த நிலையில் அமைச்சர் ஆனந்த் நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்டது குறித்து விளக்கம் கொடுத்தார். Wire-ஐ புடுங்கிட்டுப் போயிட்டாங்க என்று கூறினார். Current-லாம் கட் ஆகல சார், யாரோ ஒருத்தர் Wire-ஐ புடுங்கிட்டுப் போயிட்டாங்க என்றும் உடனே நீங்க News-ஐ பெருசாக்கிடாதீங்க எனவும் சின்ன புள்ளைங்கள வச்சுக் கூட புடுங்கிவிட்டு போறாங்க. அந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் கீழ்தரமாக செய்யுறாங்க என கூறினார்.
இதையும் படிங்க: 5 அமைச்சர்கள் கூட்டத்திலேயே மின்தடையா?தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!