மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வாட்ஸ் அப் மூலம் யாரோ கூறும் தகவல்களை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பக்கூடாது என கூறினார். திமுக ஆட்சியில் 11.50 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்தது, தற்போது 9 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்துள்ளது என தெரிவித்தார்.
9 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மின் கட்டணம் உயர்வாக வந்துள்ளது குறித்து ரொட்டீன் செக் அப் செய்கிறோம் என்று கூறியுள்ளார். கூடுதல் மின் கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வரவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கைக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மேகதாது விஷயத்தில் நாம் தெளிவாக இருக்கிறோம் என்று கூறினார். தண்ணீர் கொடுக்கமாட்டோம் என சொல்வதில் தான் கர்நாடகாவின் மொத்த அரசியலும் இருக்கிறது என்றார். மேகதாது பிரச்சனை இரு மாநில விவகாரம் என்பதால் முதல்வர் அனைத்து தரப்பு ஆலோசனைகளையும் கேட்கிறார் என்று கூறியுள்ளார். மேகதாது விவகாரத்தில் முதல்வர் தரப்பில் ஒருவாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் நிா்மல்குமாா் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனிமேல் அப்படி நடக்காது..! வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்..!
மேலும், மின்கட்டண உயர்வு என வதந்தி பரவுகிறது, வெயில் காலத்தில் அதிகளவு AC பயன்படுத்துவதால் கட்டணம் உயா்கிறது என விளக்கம் கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைவான நபர்களுக்கு தான் மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது. மின் பயன்பாடு அதிகாிக்கும் போது மின்கட்டணம் அதிகாிக்க தான் செய்யும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் “தமிழ்த்தாய் வாழ்த்து” விவகாரம்... ஆளுநர் அர்லேகருக்கு அதிர்ச்சி கொடுத்த தவெக... எம்.எல்.ஏ., அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு...!