சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ரவி தமிழக அரசின் மீது குறை கூறும் வகையில் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். முதலில் தமிழ்த்தாய் பாடுவதும் இறுதியில் தேசிய கீதம் பாடுவதும் தான் மரபு என்றும் உரையை படியுங்கள் என எவ்வளவு தாழ்மையுடன் கேட்க வேண்டுமோ, அவ்வளவு தாழ்மையுடன் சபாநாயகர் கேட்டதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். ஆளுநரின் மைக் ஆப் செய்யப்படவில்லை என்றும் அப்படி ஆப் செய்ய வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.
முன்னரே இப்படி ஒரு அறிக்கையை தயாரித்து விட்டு அவர்கள் திட்டமிட்டு செயல்படுவதாகவும், ஆளுநர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே அறிக்கை பெறுவதாகவும் தெரிவித்தார். பெண்கள் மீதான குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் ரகுபதி, பெண்கள் தைரியமாக வந்து புகார் அளிக்கும் நிலையை தமிழக அரசு உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளை விட மோசமாக தமிழக அரசுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ஆளுநர் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் வரவில்லை மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை என ஆளுநர் கூறியது பொய் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆளுநர் கூறியிருப்பது பொய் என்பதற்கு மத்திய அரசின் புள்ளி விவரங்களே சாட்சி என்றும் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை இல்லை என்று திட்டமிட்டு பொய் பரப்புகிறார் தமிழக ஆளுநர் ரவி எனவும் தெரிவித்தார். தமிழ்நாடு 11.9% பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ளதாக மத்திய அரசுதான் அறிக்கை வெளியிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழக பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது என்பதை மத்திய அரசே தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார். பொருளாதாரத்தில் தமிழ்நாடு இரட்டை இலக்கில் முன்னேறி உள்ளதற்கு மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையே சாட்சி என்றும் தமிழக அரசை குறை கூறி ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை திட்டமிடப்பட்ட வேலை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீபத்துண் அல்ல… இதுதான் உண்மை.. சுடுகாட்டோடு ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதி..!
சட்டப்பேரவையில் உள்ள பத்திரிகையாளர் அறையில் வீடியோ ஆப் செய்யப்பட்டது ஏன் என அமைச்சர் ரகுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா என விசாரித்து தெரிந்து கொள்வோம் என்று விளக்கம் அளித்தார். உயர்கல்வி அதிகம் பயிரும் பெண்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் கூறியுள்ளார். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறு, குறு தொழில்களில் தமிழகம் பின்தங்கிய இருப்பதாக கூறிய குற்றச்சாட்டு பொய் என்றும் தெரிவித்தார். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது அதிக கல்வி வளர்ச்சிக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏன் அடி வயிறு எரியுது? புறமுதுகு காட்டி ஓடும் பழனிச்சாமிக்கு பீலா தேவையா? அமைச்சர் ரகுபதி பதிலடி