புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலங்குடி சாலையில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பாஜக மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயிராது. திராவிட மடலால் ஆட்சி மிக சிறப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால் நானும் கட்சியில் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்ள என்னை பீ டீம் என்று கூறியுள்ளார்.
நாங்கள் எது பி டீம் எது சி டீம் எது ஸ்லிப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்துவிட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மடல் ஆட்சிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு துணை நிற்பவர்கள் அதில் என்றும் மாற்றம் கிடையாது.
இதையும் படிங்க: “யாரோ சொல்லி தவெகவில் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை...” - உதயநிதிக்கு நறுக் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!
ஆதவ் அர்ஜுனாவின் ஜோசியத்திற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற ஜோசியம், கிளி ஜோசியதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.
நான் திமுகவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே ஜெயக்குமார் பாடிக்கொண்டிருக்கிறார் அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும் பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை. எடப்பாடியை பொருத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர் மாவட்டச் செயலாளர் தான். ஆனால் நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால் எடப்பாடியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயிரிழந்த அதிமுக தொண்டர்..!! நேரில் ஓடோடி சென்ற இபிஎஸ்..!! குடும்பத்திற்கு நிவாரணம்..!!