புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டம் 2022-2023 கீழ் 10.32 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு பணியினை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்து சென்றார்.
இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். அதன் பின்னர் அங்கு வந்த விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி விஜயபாஸ்கர் அதே பகுதி மக்களைக் கொண்டு மீண்டும் குடிநீர் குழாயை விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு விராலிமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான சி விஜயபாஸ்கர் படத்துடன் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியின் நுழைவு வாயிலில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் ரகுபதியின் உத்தரவின் பேரில் பதாகைகள் அப்புறப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்: இலுப்பூர் அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே குடிநீர் மேம்பாட்டு பணிக்காக அம்ருத திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு அந்த பணிகள் நடைபெற்று தற்போது முடிந்துள்ளது ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இன்று சதவீத பணிகள் முடிவு பெற்று இன்று அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 90 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது இன்னமும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. விரைந்து பேரூராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு குடிநீர் இணைப்பை வழங்க வேண்டும். இதை அரசியல் ஆக்க நான் விரும்பவில்லை, மக்கள் திட்டத்தை நான் வரவேற்கிறேன்.
இதையும் படிங்க: திமுகவில் ஐக்கியமாகும் ஓபிஎஸ் - உஷாரா இல்லைன்னா எல்லாம் போய்டும்... அதிமுக தலைவர்களை எச்சரித்த திருமா... !!
மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி விட்டது. ஆகையால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மக்கள் எதிர்பார்த்தது ஒன்று சேர வேண்டும் என்பதுதான் அதேபோல் நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டோம். கூட்டணிக்குள் ஒரு சில கட்சிகள் வராதது எந்த தாக்கத்தையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏற்படுத்தாது. ஏனென்றால் மக்கள் மாற்றம் வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள்.
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் பேசியதற்கு, உண்மையான அதிமுக தொண்டர்கள் வருத்தப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட வளர்ப்புகள் நாங்கள் எப்பவும் தடம் மாறாமல் தடுமாறாமல் நிலை மாறாமல் ஒரே இலை கோடு பயணிக்கின்றோம். இன்றும் அப்படித்தான் நாங்கள் பயணிக்கின்றோம். அப்படிதான் இருக்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சட்டசபை ஆக்கபூர்வமாக விவாதத்தோடு நடைபெற்றது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவித புதிய திட்டமும் இல்லாமல் ஆக்க பணிகள் இல்லாமல் நடைபெற்றது தான் நாங்கள் பார்க்க முடிந்தது.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த காவேரி வைகை குண்டாக இணைப்பு திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த திட்டத்தில் எந்தவிதமான நிதியும் ஒதுக்காமல் திட்டத்தை திமுக அரசு முடக்கியது வேதனையை அளிக்கிறது எனக்கூறினார்.
இதையும் படிங்க: TWIST மேல TWIST..!! அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்..!!