விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி சமூக வலைதளங்களில் தாய்மொழி தினத்திற்கு கொடுத்த வாழ்த்தில் திருவள்ளுவருக்கு காவி கலரில் உடை அணிந்த போஸ்ட் குறித்த கேள்விக்கு, அதிமுக பாஜகவின் காவி மயமாகி வருகிறது என்பதை கருத்தை நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்.அதற்கு சான்றாகத்தான் எடப்பாடி பழனிச்சாமியின் சமூக வலைதள கணக்கு பதிவு அமைந்திருக்கிறது.
அண்ணா, ஜெயலலிதா, எம்ஜிஆர் தலைமையில் இயங்கிய திராவிட இயக்கம், இன்றைக்கு தமிழ் பரிவார் அமைப்புகளை பிடிப்புகளில் சிக்கி இருக்கிறது என்பது கவலை அளிக்கிறது.அவர்கள் வெற்றி பெற்றால் அதிமுக வெற்றி பெற்றால் ஆர்எஸ்எஸ் தான் நாட்டை ஆளும்.அதில் யாருக்கும் அய்யம் தேவையில்லை என்பதை நான் அவ்வப்போது சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
திருவள்ளுவருக்கு காவி பூசும் வேலையை துணிச்சலாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமூக ஊடக பக்கத்திலேயே பதிவு செய்யக்கூடிய அளவிற்கு நிலைமை மாறி இருக்கிறது. தற்போது அதனை அப்புறப்படுத்தி இருப்பது ஆறுதல் அளிக்கிறது.அதிமுக தலைவர்கள் கவனமாக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் இல்லை என்றால் சுய அடையாளத்தை இழக்க நேரிடும்.
இதையும் படிங்க: காங்கிரசை கழட்டிவிட்ட திருமா!! மார்க்சிஸ்டுடன் கைகோர்ப்பு! தமிழ்நாட்டில் உள்ளே! கேரளாவில் வெளியே!! அரசியல் லாஜிக்!
ஒவ்வொரு தோழமைக் கட்சியாக அழைத்து திமுக தொகுதி குழு பேசுவார்கள்.சுமுகமான முறையில் நல்லிணக்கமான முறையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என்று பெரிதும் நம்புகிறேன்.
திமுக கூட்டணி வலுவடைந்து இருக்கிறது.தேமுதிக இணைந்திருப்பது மகிழ்ச்சி.ஓபிஎஸ் அணியினரும் திமுகவிற்கு வருவதாக தகவல் வருகிறது.தொகுது பங்கீடு தொடர்பாக ஒத்துழைப்பாக இருக்கிறது என்பதை விசிக்கவினர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணிக்குள் சலசலப்புகள் இருப்பது சகஜம் தான். அதனால் கூட்டணி உடைந்து போகும் என்பது இல்லை.100 சதவீதம் காங்கிரஸ் திமுகவோடு கூட்டணி தொடரும்.
இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிற பொழுது புதிய அறிவிப்புகள் புதிய திட்டங்கள் போன்றவற்றை எப்பொழுதும் அறிவிப்பதில்லை. இதுதான் நடைமுறை. இது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரிந்திருக்கும். விமர்சனத்தை வைக்க வேண்டும் என்பதற்காக இதை கூறியிருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அனைத்து மக்களும் ஐந்தாண்டு காலத் திட்டங்களை வரவேற்கிறார்கள். 2026 தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வருவதில் மகிழ்ச்சி அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
அரசியல் காரணமாகத்தான் இந்தியை நம் மீது திணிக்கிறார்கள்.தனிப்பட்ட முறையில் இந்தியை மாணவர்கள் கற்பதை யாரும் தடுக்கவில்லை.இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிப்பது தான் அரசியல் நோக்கம். ஆளுநர் ரவி சங்பரிவார குழுவைச் சார்ந்தவர் என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னத்துரை இல்லத்தில் நாட்டு வெடிகுண்டு வன்முறையில் ஈடுபட்ட குண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமானால் விசிக சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகிறேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: "உச்சந்தலையில் பேரிடி..கூட்டணி உடையும்"... தேமுதிக இணைவு குறித்து திருமா கொடுத்த ரியாக்ஷன்...!