தமிழ் திரை உலகம் மீண்டும் ஒரு பெரிய இழப்பை சந்தித்துள்ளது. நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பல முகங்கள் கொண்ட கே. பாக்யராஜ் 73 வயதில் சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு தனது முன்னாள் வழிகாட்டியும், இயக்குனர் இமயமுமான பாரதிராஜா மறைந்த சோகம் அடங்குவதற்குள் இந்த திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது. இன்று மாரடைப்பு ஏற்பட்டு இயக்குனர் பாக்கியராஜ் உயிரிழந்தார். காலையில் நடை பயிற்சி மேற்கொண்டு விட்டு வீட்டிற்கு வந்த பாக்கியராஜ் சோபாவில் அமர்ந்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர் பிரிந்ததாக கூறப்பட்டுள்ளது. இயக்குனர் பாக்யராஜின் மறைவு திரை உலகத்தினரை மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் பாக்கியராஜ் உடலுக்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை செலுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜ்மோகன், பாக்யராஜ் மறைவால் நிலைகுலைந்து போனதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தன்னை அலைபேசியில் அழைத்து நன்றாக பேசுகிறீர்கள் என்று வாழ்த்தியதாக தெரிவித்துள்ளார். அரசியல் பாகுபாடின்றி யார் நல்லது செய்தாலும் ஆதரிக்கும் தாயுள்ளம் கொண்டவர் பாக்யராஜ் என்று புகழாரம் சூட்டினார். தனக்கென முத்திரை பதித்த மாபெரும் கலைஞர் பாக்கியராஜ் என்றும் தெரிவித்தார். தமிழ் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கலை உலகத்திற்கே பேரிழப்பு என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தமிழுக்கே முன்னுரிமை"..! அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அமைச்சர் ராஜ்மோகன்..!!