நேற்றைய தினம் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சென்று நெல் கொள்முதல் நிலையத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். 20 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் நெல் மணிகள் முளைத்து வீணாகும் சூழல் நிலவுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிப்பதாக கூறியிருந்தார். திமுக அரசு நெல் கொள்முதல் செய்வதை தாமதப்படுத்துவதாகவும் குறைந்த அளவு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
திமுக ஆட்சியில் நிவாரண பணிகளை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் சேகர பாபு பேசியுள்ளார். அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது என்ன செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என கூறியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுத்து பேசினார். நிவாரணப் பணிகள் குறித்து பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அருகதையும் இல்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு தான் எப்பவுமே பாதுகாப்பு! வட இந்தியர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு...!
அவர் ஆளுங்கட்சியாக இருந்தபோது என்ன செய்தார் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் கால் கூட தரையில் படாமல் தான் பணியாற்றினார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் விமர்சித்தார். கொரோனா காலத்தில் வீட்டை கூட்டிக்கொண்டு அவர்கள் உள்ளே இருந்ததாகவும் அன்றைய எதிர் கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உயிரை கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக நின்றவர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொய் பேசாதீங்க EPS... அதிமுக ஆட்சியில் 600 மூட்டைகள் தான் கொள்முதல் பண்ணாங்க... MRK பன்னீர் செல்வம் பாய்ச்சல்...!