டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் முறைக்கேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைக்கேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவருக்கு எதிராக புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் 1,182 கோடியே 88 லட்சம் ரூபாய் அளவிற்கு டெண்டர்கள் கோரப்பட்டது. டெண்டர் ஆவணத்தில் ஆய்வு செய்ததில் ஒப்பந்தங்களை லாபமடைய செய்வதன் மூலமாக அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க: அரசியலில் எந்த ஸ்டெண்டும் எடுபடாது... விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய அமைச்சர் ரகுபதி!!

இந்த முறைக்கேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளதால் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு குழு இந்த முறைக்கேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பாக இந்த விசாரணைக்கு வந்தபொழுது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கினர் பி. எஸ். ராமன் மனுதாரர் அளித்துள்ளார், இதுவழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாரத்தில் முடிவெடுக்க உள்ளதாகவும் இதனால் இந்த மௌனம் செல்லத்தக்கதாகிவிட்டது என குறிப்பிட்டார்.

அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கினர் சுரேஷ் புகார் அளித்து இரு ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் அனைத்து ஆவணங்களும் தகவல் உரிமை உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன எனவும் மணிமீது விரிவான வாதங்களை முன்வைக்க விசாரணை திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் எனவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டிருக்கின்றார்.
இதையும் படிங்க: எனக்கு என் மாமா தான் வேணும்.. 55க்கு ஆசைப்பட்டு கணவனை தீர்த்துக்கட்டிய 20 வயது இளம்பெண்..!