பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் 20 வயதான இளம்பெண் குஞ்சா தேவி என்பவருக்கு நபிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்வான் கிராமத்தைச் சேர்ந்த பிரியான்சு (25) என்பவருடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் நடந்த திருமணத்தில் குஞ்சா தேவிக்கு விருப்பம் இல்லை. காரணம் அவர் தனது 55 வயதான மாமா ஜீவன் சிங்குடன் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தகாத உறவில் இருந்துள்ளார்.

55 வயது மாமாவிற்கு 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க அப்பெண்ணின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால் அவரச அவசரமாக பிரியான்சுவுக்கு குஞ்சா தேவியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அவ்ளோ அசிங்கமா பேசிட்டு ஓட்டுக்காக மட்டும் ஓடி வருவீங்களா? ராகுல்காந்திக்கு மீண்டும் சிக்கல்.. பிரசாந்த் கிஷோர் ஆவேசம்..
இதனால் வேறு வழியின்றி, தனது கணவனை கொன்றுவிட்டு மீண்டும் தனது சொந்த மாமாவான ஜீவன் சிங்குடன் சேர்ந்து வாழ குஞ்சாதேவி முடிவு செய்தார். இதனையடுத்து கணவன் பிரியான்சுவை கொல்ல கூலிப்படையை பயன்படுத்தி உள்ளார் குஞ்சாதேவி.

இதனை அடுத்து கடந்த 25ம் தேதி அன்று தனது தங்கை வீட்டிற்கு சென்று விட்டு ரயிலில் பயணித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரியான்சு, நபிநகர் ரயில் நிலையத்தை வந்தடைந்தார். பின்னர் தனது மனைவியை தொடர்பு கொண்டு தன்னை வீட்டிற்கு அழைத்து வர பைக்கில் யாரேனும் அனுப்பும்படி கேட்டுள்ளார். தொடர்ந்து வீட்டை நோக்கி புறப்பட்ட பிரியான்சுவை திடீரென வழிமறித்த இரண்டு பேர், அவரை துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அப்போது குஞ்சாதேவி கிராமத்தை விட்டு தப்பியோட முயன்றதால் போலீசாருக்கு அவரின் பக்கம் கவனம் திரும்பியது.

இதனையடுத்து அவர்கள் குஞ்சாதேவியின் தொலைபேசி தகவல்களை எடுத்து ஆய்வு செய்ததில், அவர் தனது மாமா ஜீவன் சிங்குடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரது தொலைபேசி எண் விவரங்களை ஆராய்ந்ததில் அவர் கொலையாளிகளுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியது வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.
இதனை தொடர்ந்து குஞ்சாதேவி மற்றும் கொலை செய்த இரண்டு பேரையும் கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள ஜீவன் சிங்கை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தாய், பிஞ்சுக் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கொன்றது அம்பலம்..!