• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இந்தியாவையே மிரள வைக்கும் பிரம்மாண்டம்... “தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026” தொடங்கிவைத்த அமைச்சர் ஸ்ரீநாத்...!

    இந்திய கார் பந்தய உலகில்  புதிய தொடக்கமாக  2026 தேசிய சாம்பியன்ஷிப் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. 
    Author By Amaravathi Thu, 20 Aug 2026 15:09:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister srinath car race inauguration

    இந்திய கார் பந்தய உலகில் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் நோக்கில், சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026 சென்னையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. “ஒரே சாம்பியன்ஷிப், ஒரே தேசிய பட்டம்” என்ற அடிப்படையில் நடைபெற உள்ள இந்தப் போட்டித் தொடரின் அறிமுக விழாவில் மோட்டார்ஸ்போர்ட் துறையின் முக்கிய பிரமுகர்கள், அரசு பிரதிநிதிகள், சாம்பியன்ஷிப் அணிகள் மற்றும் ஊடகத்தினர் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு மீன்வளத்துற அமைச்சர் ஸ்ரீநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கார் ரேஸுக்கான சிறப்பு லோகோவை வெளியிட்டார். எஃப்ஐஏ உலக மோட்டார் விளையாட்டு கவுன்சில் உறுப்பினரும், எஃப்ஐஏ சர்வதேச கார்ட்டிங் ஆணையத் தலைவருமான அக்பர் இப்ராஹிம், FMSCI தலைவரான அரிந்தம் கோஷ், சென்னை டர்போ ரைடர்ஸ் இயக்குநரும் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஸ்வேதா சுந்தீப் ஆனந்த், ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநர் ஸ்ரீனிவாசு அல்லாபன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்களுடன் FMSCI கவுன்சிலர்கள், சாம்பியன்ஷிப் அணிகள் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

    1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சாம்பியன்ஷிப், இந்தியாவின் முதன்மையான சர்க்யூட் கார் பந்தயத் தொடராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், அர்மான் இப்ராஹிம், ஆதித்யா பட்டேல் மற்றும் குஷ் மைனி உள்ளிட்ட பல முன்னணி பந்தய வீரர்கள் உருவாகியுள்ளனர். அந்த வரிசையில், புதிய தலைமுறை வீரர்களுக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 2026-ம் ஆண்டு சாம்பியன்ஷிப் அமைய உள்ளது.

    இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு கப்பல் கட்டும் தளம் - அமைச்சர் ஸ்ரீநாத் கொடுத்த அதிரடி அப்டேட்... மீனவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    சென்னை டர்போ ரைடர்ஸ் மற்றும் ஜேகே டயர் நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப், இந்திய மோட்டார்ஸ்போர்ட் சூழலியலை மேலும் வலுப்படுத்துவதோடு, அடிமட்ட நிலையில் இருந்து தொழில்முறை போட்டிகள் வரை திறமையான பந்தய வீரர்களை உருவாக்கும் முக்கிய தளமாக செயல்பட உள்ளது.

    இதுகுறித்து ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநர் ஸ்ரீனிவாசு அல்லாபன் கூறுகையில், “கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப், இந்திய மோட்டார்ஸ்போர்ட்டின் வளர்ச்சிக்கான ஜேகே டயரின் அர்ப்பணிப்பின் மையமாக இருந்து வருகிறது. பல தலைமுறைகளைச் சேர்ந்த திறமையான பந்தய வீரர்களுக்கு போட்டியிடவும், விளையாட்டின் உயர் நிலைகளுக்கு முன்னேறவும் இந்த சாம்பியன்ஷிப் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. 2026 பருவத்தை எதிர்நோக்கும் நிலையில், சென்னை டர்போ ரைடர்ஸ் மற்றும் FMSCI உடன் இணைந்து வளர்ந்து வரும் திறமைகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

    2026-ம் ஆண்டுக்கான தற்காலிக பந்தய அட்டவணையில் மொத்தம் நான்கு சுற்றுகள் இடம்பெற்றுள்ளன. முதல் இரண்டு சுற்றுகள் செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரையும், அக்டோபர் 23 முதல் 25-ம் தேதி வரையும் கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற உள்ளன.

    அடுத்ததாக, மூன்றாவது சுற்று நவம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை பெங்களூருவில் உள்ள பிரென் ரேஸ்வேயில் நடைபெறுகிறது. சாம்பியன்ஷிப்பின் நான்காவது மற்றும் இறுதிச்சுற்று டிசம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற உள்ளது.

    இந்தியாவில் மோட்டார்ஸ்போர்ட்டை வளர்ப்பதிலும், அதன் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதிலும் ஜேகே டயர் மோட்டார்ஸ்போர்ட் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக முக்கிய பங்காற்றி வருகிறது. உலகத் தரத்திலான போட்டித் தளங்களை உருவாக்குவதுடன், மோட்டார்ஸ்போர்ட்டில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கான சிறப்பு முயற்சிகளையும் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

    மறுபுறம், சென்னை டர்போ ரைடர்ஸ் (CTR) தொழில்முறை மோட்டார்ஸ்போர்ட் அணியாகவும், மோட்டார்ஸ்போர்ட் சூழலியல் அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு தனது அறிமுகப் பருவத்திலேயே F4 இந்திய சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை டர்போ ரைடர்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. அடிமட்ட பந்தயங்களில் தொடங்கி தொழில்முறை போட்டிகள் வரை திறமைகளை உருவாக்கி, அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட தளத்தையும் சென்னை டர்போ ரைடர்ஸ் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

    இதையும் படிங்க: 35 வருஷமாச்சு! எனக்கும் பிரியங்கா காந்திக்கும் மட்டுமே தெரியும் அது! சோனியா குறித்து ராகுல்காந்தி பதிவு!

    மேலும் படிங்க
    ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

    ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!

    எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

    டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்... தெலங்கானா முன்னாள் முதல்வர் மகளுடன் ஜோதிடர் ராதன் பண்டிட் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் கணக்கு...!

    ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்... தெலங்கானா முன்னாள் முதல்வர் மகளுடன் ஜோதிடர் ராதன் பண்டிட் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் கணக்கு...!

    அரசியல்
    வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவதா? முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி!

    வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவதா? முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி!

    தமிழ்நாடு
    சுதந்திரமாக ஓடி விளையாடு என் செல்லமே..!! செல்ல நாய் பகீரா மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்..!

    சுதந்திரமாக ஓடி விளையாடு என் செல்லமே..!! செல்ல நாய் பகீரா மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்..!

    சினிமா

    செய்திகள்

    ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

    ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!

    எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

    டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்... தெலங்கானா முன்னாள் முதல்வர் மகளுடன் ஜோதிடர் ராதன் பண்டிட் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் கணக்கு...!

    ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்... தெலங்கானா முன்னாள் முதல்வர் மகளுடன் ஜோதிடர் ராதன் பண்டிட் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் கணக்கு...!

    அரசியல்
    வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவதா? முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி!

    வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவதா? முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி!

    தமிழ்நாடு
    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share