அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, கட்சித் தலைமைக்குக் கடிதம் கொடுக்காமல் ஊடகம் வாயிலாகப் பேசுவது ஏன்? எனத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. துரோகிகளுக்குக் கட்சியில் இடமில்லை எனவும், 2026 தேர்தலை நோக்கி அதிமுக ஒரு எஃகு கோட்டையாகத் திகழ்வதாகவும் அவர் மதுரையில் பேட்டியளித்தார்.

யாராவது ஒரு கட்சியில் இணைய வேண்டுமென்றால், அந்தக் கட்சியின் தலைமைக்குக் கடிதம் எழுத வேண்டும் அல்லது நேரில் சென்று பேச வேண்டும். அதை விடுத்து, தினமும் ஊடகம் மூலமாகவே நான் இணையத் தயார், இணையத் தயார் என்று அறிவித்துக் கொண்டிருப்பது என்ன அரசியல்? என வினவினார்.
இதையும் படிங்க: “முத்தரையர் மறுவாழ்வு திட்டம் வேண்டும்!” - முதலமைச்சரிடம் தமிழர் தேசம் கட்சி தலைவர் கோரிக்கை
அதிமுக ஒரு எஃகு கோட்டை, கட்சியைப் பலவீனப்படுத்த நினைப்பவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் இங்கே இடமில்லை என்பதை எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஏற்கனவே தெளிவாகக் கூறிவிட்டார். மீண்டும் மீண்டும் அதையேக் கேட்பது வீண் வேலை என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகச் சாடிய அவர், திமுக ஆட்சியில் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கின்றன. மக்கள் பாதுகாப்பற்றச் சூழலில் இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சரோ எல்லாவற்றையும் சரி செய்துவிட்டதாகக் கூறுகிறார். கள யதார்த்தம் வேறாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
எப்போதும் செய்தியாளர்களிடம் கலகலப்பாகப் பேசும் செல்லூர் ராஜு, இன்று ஓபிஎஸ் விவகாரத்தில் காட்டியத் தீவிரம், அதிமுக தலைமைக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் இடையிலானத் தூரம் இன்னும் குறையவில்லை என்பதையேக் காட்டுகிறது.
இதையும் படிங்க: “எடப்பாடியாரை முதலமைச்சராக ஏற்போரை இருகரம் கூப்பி வரவேற்போம்!” - ஆர்.பி. உதயகுமார் அதிரடி!