வடகிழக்க பருவமழை தமிழகத்தில் தொடங்கியது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்கள் மழையால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. நீர் பிடிப்பு பகுதிகளும் நிரம்பி வருகின்றன. பருவமழையின் தொடக்கத்துடன் தொடர்ந்து மழைப்பொழிவு அதிகரித்துள்ளது.
அக்டோபர் 1 முதல் 20 வரையிலான காலத்தில், சராசரி 14 செ.மீ. மழை பெய்துள்ளது, இது சாதாரணத்தை விட 58 சதவீதம் அதிகம். சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், முதலமைச்சர் ஸ்டாலின், அக்டோபர் 19 அன்று மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருவாரூர், தேன்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தார்.

இதில், கடந்த மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கிய இடங்கள், அவற்றை அகற்றும் உடனடி நடவடிக்கைகள், கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல் போன்றவை விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: நினைவைப் போற்றுவோம்... காவலர் வீரவணக்க நாள்... முதல்வர் ஸ்டாலின் மரியாதை...!
தொடர்ந்து மழை அதிக அளவு பெய்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, மழை நீரை அகற்றுவது, அடிப்படை வசதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசித்தார்.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல் பணிகள்... ஆட்சி நமதே! வேகம் காட்டும் திமுக...!