தமிழக அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாகவும், அதனை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்தும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, உணவுத்துறை மற்றும் கூட்டுறவு துறை ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன் மற்றும் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.