தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் இருந்தே கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்தன.
கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்த முயற்சிகளின் முக்கிய பகுதியாக, அவர் திமுக நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆலோசனைகளை நடத்தி வந்தார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். மீண்டும் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் திமுகவின் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக முதலமைச்சர ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இதையும் படிங்க: நெல்லை TO நாங்குநேரி... திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம்..!!
திமுக வேட்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள திமுக வார் ரூமுக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: PTR-க்கு டெல்லியில் கூட ரசிகர்கள்...! சம்மந்தமே இல்லாத வேட்பாளர் அவரு... சுந்தர் சி-யை விமர்சித்த கனிமொழி..!!