2026 சட்டமன்ற தேர்தல்களில் 175 இடங்களில் உதயசூரியன் சின்னம் களம் காண்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று விரைந்து பணியாற்றுங்கள் என்றும் கவனம் சிதறாமல் இலக்கை வெல்வோம் எனவும் தெரிவித்துள்ளார். மதவாத அரசியல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் துரோகத்தை எதிர்த்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற ஆட்சியை அமைய வேண்டும் என்றும் நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த நான்கு வாரங்கள் அயராமல் உழைக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயசூரியன் மட்டுமல்லாமல் பானை, கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி, நட்சத்திரம், ஏணி ஆகியவையும் நமது சின்னம் தான் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். திமுக சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் ஜனநாயக பூர்வமாக நடைபெற்று இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை காத்திட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றங்கள் என்றும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். தேர்தல் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுமாறு திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்தார். திமுக கூட்டணியில் விரிசல் மற்றும் பிளவு உருவாகாத என காத்திருந்த சதிகாரர்களின் எண்ணம் தவிடு பொடியானதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!
தொகுதிகள் எண்ணிக்கை தொடர்பாக தான் கூறியதை கூட்டணி கட்சிகள் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கு ஏற்ப எண்ணிக்கை நிர்ணயிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளின் தொகுதிகளில் முழுமையான வெற்றியை உறுதி செய்ய உத்திரவாதம் கொடுத்திருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாபநாசம், மணப்பாறை தொகுதிகள் வேண்டும்..! விருப்பத் தொகுதிகள் குறித்து மமக ஜவாஹிருல்லா ஆலோசனை..!!