தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை Stalin Statement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன் என்றும் அவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும், ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட் என்பதையும் பட்டியலிட்டு உள்ளார்.
1.ஊரக வளர்ச்சித் துறை சார்பில் உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் தொழில்துறை சார்பில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
இதையும் படிங்க: போலி பெண் விடுதலை... முகத்திரை கிழிஞ்சது..! வெளுத்து வாங்கிய வளர்மதி..!
2. கால்நடை - பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் பால் உற்பத்தி உயர்வு - மீனவர்கள் வாழ்வு மேம்பாடு
3.நகராட்சி நீருவாகத் துறை சார்பில் உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள் சிறு - குறு நடுத்தரத் தொழில் துறை சார்பில், 5 சிறப்புத் தொழில் குழுமங்கள் அமைக்கப்படும்
4. நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாதுகாப்பான நவீன சாலை தொழில்நுட்பம்
5.கைத்தறி மற்றும் ஜவுளித்துறை சார்பில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிறப்பான திட்டங்கள்

6.வீட்டு வசதித்துறையின் சார்பில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சேர்த்து 7 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
7. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு
8. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்
9. 2038 பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், லைப்ரரி 5.0, வெற்றிப்பள்ளிகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்
10. உயர்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் 2.0 திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்
(பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பொருளாதார முன்னேற்றம்
11.ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒவ்வொருவருக்கும் வீட்டுமனைப் பட்டா ஆகியவை வழங்க நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திருக்கோவிலூர் சுவர்களில் பரபரப்பு... செங்கோட்டை டூ செயிண்ட் ஜார்ஜ் கோட்டை... பொன்முடி மகனால் சிக்கலில் திமுக...!