100 நாள் வேலை திட்டம் மாற்றங்களை கொண்டு வர திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் தொடர்பாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாது பல்வேறு மாற்றங்களை இந்த திட்டத்தில் கொண்டு வருவதால் மாநில அரசுக்கு நிதி சுமை அதிகரிக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் ஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். மத்திய அரசின் ஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தில் திருத்தம் செய்து மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஜி. ராம்ஜி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தம் செய்து மத்திய அரசு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு பாகுபாடு இன்றி திறம்பட செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆளுநர்களின் நடவடிக்கைக்குக் கண்டனம்; எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக முடிவு!
தொடர்ந்து100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். கிராமப்புற மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அதிமுக தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்துவார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளார். தொடர்ந்து 100 நாள் வேலை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: தேர்தல் அறிவிப்பதற்குள் முந்திக்கணும்!! அதிமுக பண்ணுன தப்பை பண்ணவே கூடாது!! திமுக பட்ஜெட் ப்ளான்!!