ஜனவரி ஆறாம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் தொடங்கியது. நான்கு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சட்டப்பேரவை கூடியது. கடந்த கூட்டத்தின் போது 2025-26 ஆம் ஆண்டுக்கான பொதுபட்ச தாக்கல் ஆனது. அதன் மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆறு மாத காலத்தில் சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நேற்று முன்தினம் சட்டபேரவை மீண்டும் கூடியது.

3வது நாள் கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் குறித்த ஆளுநரின் கருத்தை பேரவை நிராகரித்ததாக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்தம் மசோதா தொடர்பான உரையின் போது ஆளுநர் ரவி குறித்து பேசினார்.
இதையும் படிங்க: தொடர் கதையாகும் மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!
சட்டம் முன் வடிவில் திருத்தங்களை கூற ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் சட்டம் ஏற்றுவது என்பது பேரவைக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆளுநரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது என சட்டப்பேரவை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆளுநர் ரவி, அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருவதாக கூறினார். அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி குடியரசு தலைவருக்கு அனுப்பிய நிலையில் அவருக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் கருத்துக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்! கலக்கத்தில் மா.செக்கள்!