தர்மபுரி திமுக எ.ம்பி மணி இல்ல திருமண விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். தொடர்ந்து திருமண விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார். சிறப்பாக பணியாற்ற கூடியவர்களுக்கு திமுகவில் பதவி தேடி வரும் என்று தெரிவித்தார். எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்ற நேற்றைய தினம் மிக முக்கியமான தினம் என்று தெரிவித்தார். 
முக்கியமான தீர்மானம் ஒன்றையும் நேற்றையதினம் கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம் என்று கூறினார். தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும் கட்சிகள் வலியுறுத்தியதாக தெரிவித்தார். உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் தந்திர முயற்சி ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் இருந்து முதல் குரல் எழுந்ததாக தெரிவித்தார்.

 மேலும், வாக்காளர்களின் உரிமை பறிக்கும் விவகாரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எஸ்.ஐ. ஆர்.க்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் கூட அதிமுக பங்கேற்கவில்லை என்றும் இதில் கூட எடப்பாடி பழனிச்சாமி இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம் சாட்டினார். பாஜகவின் பாதம்தாங்கி பழனிச்சாமி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார். 
இதையும் படிங்க: வளர்ச்சியை சிதைக்க சதி...! என்ன ஆதாரம் இருக்கு? அன்புமணியின் குற்றச்சாட்டை மறுத்த பள்ளிக் கல்வி துறை...! 
பாஜகவுக்கு பயந்து தேர்தல் ஆணையத்தை எதிர்க்காமல் இரட்டை வேடம் போடுவதாகவும் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சீராய்வு என்ற பெயரில் தீய செயலை தேர்தல் ஆணையம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். பீகாரில் பிரதமர் மோடி பேசிய கருத்தை தமிழ்நாட்டில் பேச முடியுமா என்றும் தைரியம் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தின் திமுக 2.0 ஆட்சி அமைந்தது என்பது தான் தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் தலைப்புச் செய்தி என்றும் எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும் திமுகவின் 2.0 ஆட்சி அமைவது உறுதி என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பயமில்லை பதட்டமில்லை! தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!