கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் தொடங்கியது. கிராமசபை கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாடினார். பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், கிராமங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதில் அலட்சியம் கூடாது எனவும் கூறினார். பிளாஸ்டிக் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் சாதிப் பெயர்களை நீக்கி பூக்களின் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தண்ணீரை பண போல் பார்த்து செலவழிக்க வேண்டும் என்றும் மழைநீர் சேகரிப்பு அவசியம் எனவும் வலியுறுத்தினார். மூன்றாவது முறையாக கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று இருப்பதாகவும், முதல்முறையாக இணையவழியில் கிராம சபை கூட்டம் நடைபெற்று உள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டின் முதுகெலும்பாக கிராமங்கள் உள்ளதாக கூறிய அவர், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம நிர்வாகத்தில் நிதி மேலாண்மை அவசியம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நச்சுன்னு 4 பாயிண்ட்... திமுக ஜோலியை முடித்த அண்ணாமலை... ஆட்டம் காணும் அறிவாலயம்...!
இதனிடையே, தண்ணீர் பிரச்சினை, தெரு விளக்குகள் தேவை, சாலை வசதி, பேருந்து சேவை என பல்வேறு தேவைகள் குறித்து கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சாதிப் பெயர் கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்தும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காசா மக்களுக்காக கண்ணீர்... எல்லாத்துக்கும் பதவி சுகம் தான் காரணம்! விளாசிய சீமான்...!