தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர்.
இரு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு, காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, படுகாயம் அடைந்த 40க்கும் மேற்பட்டோரில் 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்கு ஆளாகி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விரக்தியின் உச்சியில் இபிஎஸ்… பொய், துரோகம் தவிர வேற ஒன்னுமே இல்ல! பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்…!
உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான KKSSR ராமச்சந்திரனை தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறினார்.
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற அரசு துணை நிற்கும் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 2,074 கோடி ரூபாயில் திட்டப் பணிகள்... தென்காசியின் வளர்ச்சி மலைக்க வைக்கிறது! முதல்வர் பெருமிதம்...!