அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் என்று சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். முதல்வர் விஜய் நல்லாட்சி தர வேண்டும் என்றும் தமிழ்நாட்டு இளைஞர்கள் மட்டும் அல்ல அது தாங்களும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து இருப்பதாக முதல்வர் விஜய்க்கு புகழாரம் சூட்டியிருந்தார்.
தனது முழு ஆதரவை எம்எல்ஏ காமராஜர் தெரிவித்த நிலையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து விளக்கப்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அறிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் S.காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால் S.காமராஜ் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: டுபாக்கூர் காங்கிரசா.? டிடிவி-லாம் பேச அருகதையே இல்ல.! விளாசிய தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ்..!
எம் எல் ஏ காமராஜ் இன்றைய செயல்பாடு வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினருக்கும், வாக்களித்த மக்களுக்கும் செய்த பெரும் துரோகம் என்று கூறியுள்ளார். கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "விஜய் ஃபோர்ஜரி"..! அது FAKE வீடியோ..! போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன்..!!