திமுக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார். திமுகவின் ஒவ்வொரு நகர்வையும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணிக்காக தான் இப்படி பேசி வருவதாகவும், பாஜகவிற்கு அடிமை சேவகம் செய்கிறார் என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை திமுக முன்வைத்து வருகிறது. நெல் கொள்முதல் விவகாரமும் வீரியம் எடுத்தது.
திமுக ஆட்சியில் குறைந்த அளவு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் நெல்மணிகள் முளைக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அது மட்டுமல்லாது நெல் கொள்முதல் விவகாரம் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.

இந்த நிலையில், நெல் கொள்முதலில் எதிர்க்கட்சிகள் தற்போது அரசியல் செய்வதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். திமுக அரசை தூற்றவேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தினம்தோறும் தன்னைப் பற்றி செய்தி வரவேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: வாக்குரிமை பறிப்பில் இபிஎஸ் பாட்னர்... மக்கள் மன்னிக்கவே மாட்டாங்க! EPS- ஐ பந்தாடிய அமைச்சர் ரகுபதி...!
நெல் ஈரப்பத அளவை உயர்த்த மறுத்துவிட்டு வேளாண் மாநாட்டில் பங்கேற்று இருக்கிறார். பிரதமர் மோடி என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆக்கபூர்வமான வேலையை செய்யாமல் தூற்றவேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம் சாட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஜெ. மாதிரி வருமா? பணம் இருந்தா தான் இப்பலாம் அதிமுகவில் பதவி... உடைத்து பேசிய சத்யபாமா...!