கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தது அதேபோல் எடப்பாடி பழனிசாமி என் பெயரை கூட சொல்லாமல் இருந்ததும் அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் தேச பொருளாக மாறிய நிலையில், சட்டசபையிலும் இருவருக்கும் இடையே சமூக நிலை ஏற்படவில்லை. செங்கோட்டையன் ஏன் பேசவில்லை என்பதை அவரிடமே கேளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தது இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வருவதை உறுதி செய்வதாகவே தெரிந்தது.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார். தலைமைக்கு அவர் கெடு விதித்த நிலையில் அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதற்கிடையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் மரியாதை செலுத்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் சென்ற நிலையில், சசிகலாவையும் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.
இதையும் படிங்க: இதனால பெரிய குழப்பம்... சும்மா கணக்கு காட்டுறாங்க..! SIR விவகாரத்தில் NR இளங்கோ காட்டம்...!
இதையடுத்து செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கி உள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் எம்.பி. சத்தியபாமா நீக்கப்பட்டார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் உண்மையாகவே வருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார். காரணம் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து வந்ததாகவும், எத்தனை மூத்த நிர்வாகிகள் இருந்தாலும் உழைக்கின்றவர்களுக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாய்ப்புகள் வழங்கியதாகவும் தெரிவித்தார். இப்போது, பணம் இருந்தால் மட்டுமே வாய்ப்பு என அறிந்தேன் என்று முன்னாள் எம்.பி. சத்தியபாமா கூறினார்.
இதையும் படிங்க: கூட்டு பாலியல் வன்கொடுமை! குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்...!