மகேந்திர சிங் தோனி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான தோனி, இன்று தனது 45வது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ராஞ்சியில் பிறந்த தோனி தனது இளமைப் பருவத்தில் இருந்தே கிரிக்கெட்டின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தார்.
டிக்கெட் கலெக்டராக பணியாற்றிய காலத்தில் கூட தனது கனவை விடாமல் பயிற்சி செய்து வந்த அவர், இந்திய அணியில் அறிமுகமான பிறகு உலக கிரிக்கெட்டை தனது திறமையால் மாற்றினார். அமைதியான தலைமைத்துவத்திற்கு பெயர் பெற்ற கேப்டன் கூல் என்ற அழைப்புக்கு உரியவரான தோனி, இந்திய அணியை இருபது20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட முக்கிய கோப்பைகளை வெல்லச் செய்த சாதனையாளர். இவரது தலைமையில் இந்திய அணி உச்சத்தை தொட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்திற்கு இட்டுச் சென்றதும் தோனியின் சிறப்பான சாதனையாகும்.

சென்னையையும் மகேந்திர சிங் தோனியையும் பிரிக்கவே முடியாது என்ற அளவுக்கு நெருக்கம் கொண்டவர். இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 19 ஆவது நிமிடம் உங்கள் பெயரை முழக்கமிடும் அந்த ஆரவாரமான விசில் சத்தங்கள் முதல், நீங்கள் ஊக்கமளித்த எண்ணற்ற இதயங்கள் வரை உங்கள் பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு உணர்வில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது என புகழ்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மனவேதனை..! கடலூரில் கோரவிபத்து...! உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்... முதல்வர் விஜய் அறிவிப்பு..!!
'கேப்டன் கூல்' மகேந்திர சிங் தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று கூறினார். அவரது சிறப்பான கிரிக்கெட் சாதனைகள், நிதானமான தலைமைத்துவம் மற்றும் எளிமையான குணம் ஆகியவை பல தலைமுறையினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் இன்னும் பல வெற்றிகள் அமைய வாழ்த்துவதாகவும் உங்களுக்கான அந்த விசில் சத்தங்கள் மேலும் மேலும் வலுப்பெறட்டும் என்றும் முதல்வர் விஜய் வாழ்த்தி உள்ளார்.
இதையும் படிங்க: கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!