கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, 3 இளைஞர்கள் அவரை தாக்கி, மாணவியை வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அடித்து விரட்டப்பட்ட நிலையில், ஆண் நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பீளமேடு போலீசார் மாணவியை மீட்டனர். 
மாணவியை கூட்டுப்பாலில் கொடுமை செய்து தப்பி ஓடிய மூவரை பீளமேடு காவல்துறை இடத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தப்பியோடிய 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நமது பொழுது விடிகிறது, எந்த ஊரில் எந்தப் பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது, வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் போனாலும் சரி பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என்று சாடினார்.
இதையும் படிங்க: அனைத்து கட்சி கூட்டமா?... நல்லா திசை திருப்புரீங்களே! முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்...!
தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என வெட்டி வசனம் பேசும் திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர் என்றும் இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் ஸ்டாலின், கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கோவில் சொத்து அபகரிப்பு? விளக்கம் கொடுக்காத அரசு! சந்தேகம் எழுப்பும் நயினார்...!