மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள சமநத்தம் கிராமத்தில் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 36 வயதான செந்தில்குமார் என்பவரை வெட்டிக்கொன்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காலை 6 மணிக்கு கடையை திறக்கச் சென்றபோது நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக செந்தில்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

குற்றவாளிகள் எல்லாம் கொழுத்துப் போய் திரிகின்றனர் என்று காட்டமாக கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனது தேநீர் கடையின் முன்பு இடையூறு அளிக்கும் வகையில் மது போதையில் இருந்தவர்களைத் தட்டிக் கேட்ட அஇஅதிமுக நிர்வாகி தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: செங்கல் சூளையில் வட மாநில பெண் வன்கொடுமை..! திமுகவுக்கு சமாதி கட்டுற நேரம் வந்துருச்சு..! கொந்தளித்த நயினார்
தவறுகளைத் தட்டிக் கேட்போருக்கு மரணமே தண்டனையாகக் கிடைக்குமளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துப் போயுள்ள திமுகவின் அவல ஆட்சியில், குற்றவாளிகள் எல்லாம் கொழுத்துப் போய் திரிகின்றனர் என்று காட்டமாக தெரிவித்தார். பொதுமக்கள் எல்லாம் அச்சத்தில் ஒடுங்கிப் போயு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த மக்கள் நிம்மதியுடன் வாழ வழிவகை செய்ய முடியாத முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தமுறை அரியணை என்பது கனவிலும் கிடைக்காத ஒன்று என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இப்போதான் விசில் அடிக்க ஆரம்பிச்சிருக்கு.. நாங்க டிரம்ஸ் அடிப்போம்..!! நக்கலடித்த நயினார்..!!