வலதுசாரி ஆதரவாளரும் பிரபல யூடியூபருமான மாரிதாஸ் மதுரையில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக முதலமைச்சர் விஜய் தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகளை மாரிதாஸ் முன்வைத்து வந்தார். தற்போது கைதாகி உள்ளார். Youtuber மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெகவின் “ரீல்ஸ் மாடல்” அரசின் ரியல் முகத்தை மக்களுக்கு விளக்கிக் கூறிய ஒரே காரணத்திற்காக சமூக ஊடகவியலாளர் மாரிதாசை தடாலடியாக கைது செய்திருக்கும் முதல்வர் ஜோசப் விஜயின் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.

தங்கள் நிர்வாகத்தின் மீதான சாதாரண விமர்சனங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா? என கேள்வி எழுப்பினார். ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்பதை போல, திமுகவிற்கு மாற்று சக்தி என்று கூறி மக்கள் மனதைக் கலைத்து ஆட்சிக்கு வந்து விட்டு, பொதுமக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெறிப்பதில் திமுகவை விட தவெக அசுர வேகத்தில் செயல்படுவது வெட்கக்கேடானது என்றார்.
இதையும் படிங்க: "அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!
எனவே, கைது செய்யப்பட்ட திரு. மாரிதாஸ் அவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். திமுகவைப் போலவே காவல்துறையை தங்கள் கைக்கூலிகளாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை அபகரிக்க தவெக அரசு முயல்வதை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண்... சர்ச்சையை கிளப்பிய அமைச்சரின் கருத்து..! நயினார் சரமாரி கேள்வி..!!