பெரம்பலூரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவரிடம், இந்தியாவில் மத்திய அரசு தற்போது அமல்படுத்தியுள்ள GST வரி குறைப்பால் அடித்தட்டு ஏழை மக்களுக்கு எந்த பயனுமில்லை என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அடித்தட்டு மக்களுக்கு மத்திய அரசு தான் ரேஷன் பொருட்களை குறைந்த விலையில் வழங்கி வருவதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
உலக மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் ன்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் கடைவிரிக்க விட்டுவிட்டு சுதேசி பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்று மோடி கூறுவது இந்தியாவில் சாத்தியமா என்ற கேள்விக்கு, சாத்தியமே என்று பதிலளிக்க நயினார் நாகேந்திரன், டிஜிட்டல் பரிவர்த்தனை சாத்தியமில்லை என்றார்கள் இன்று சாலையோர இளநீர் வியாபாரி கூட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர் எனவே சுதேசி பொருட்களை வாங்குவது என்பதும் சாத்தியமே என்றார்.
த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யின் தாய், தந்தையர் காஞ்சி மடத்தில் ஜெயேந்திரரரை சந்தித்துள்ளது குறித்த கேள்விக்கு, நல்ல விஷயம் தான் தவெக தலைவர் .விஜயின் கொள்கை என்னவென்று தெரியாது இருந்தாலும் பத்தி வேறு, கொள்கை வேறு என்றார்.
இதையும் படிங்க: சமூக நீதி எல்லாம் அரசியல் நேரத்து சாயம் தானா? முதல்வரை விளாசிய நயினார்...!
அக்டோபர் 12 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் மதுரையில் தொடங்கவுள்ள பிரச்சார யாத்திராவில் பாஜக அகில இந்திய தலைவர் கே.பி.நட்டா கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர் கூட்டணியில் உள்ள அதிமுக சார்பில் அக்கட்சியுள் முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார்.
அத்தியாவசிய பொருட்களின் மீதான GST வரியை குறைத்துள்ளதாக கூறிவிட்டு ஏற்கனவே வரியில்லாமல் இருந்த நோட்டு, புத்தகங்கள் தயாரிக்க உதவும் அட்டைக்கு 18% விழுக்காடு வரி விதித்துள்ளதோடு, GST வரி குறைப்புக்கு முன்பே சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறித்த கேள்விக்கு இது பிரதமர் மட்டும்எடுத்த முடிவு அல்ல, இந்த வரி குறைப் நடவடிக்கையில் அனைத்து மாநில நிதி அமைச்சகத்திற்கும் பங்குள்ளது என்று தெரிவித்த அவர் இதிலுள்ள குறைகள் அடுத்தடுத்து களையப்படும் என்றார்.
இதையும் படிங்க: டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்... பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்... பரபரப்பு பின்னணி...!