தொழில்துறையை காக்க மின்சாரப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். மின் பிரச்சனைக்கு வெற்று வாக்குறுதிகள் அளிக்காமல் தொழில்நுட்ப ரீதியாகப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். சென்னை முதல் கோவை வரை நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால் மக்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுதாவதாக ஊடகங்களில் வரும் செய்தி கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார்.
வெயில் காலம் முடிந்தும் மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தமிழக வெற்றிக் கழக அரசு, மக்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளது என குற்றம்சாட்டி உள்ளார். இந்த நிர்வாகத் தோல்வியும் அரசின் மெத்தனப் போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.

வீடுகள் மட்டுமல்லாது, கோவை, விழுப்புரம் போன்ற தொழில் நகரங்களில் நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாகி உற்பத்தி மொத்தமாக முடங்கியுள்ளதாகத் தொழில்துறையினரே வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொழில்துறையைச் சீரழித்த பெருமை இந்த தமிழக வெற்றிக் கழக அரசையே சாரும் என்று கூறினார்.
இதையும் படிங்க: தேசிய கீதத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
மின் வாரியப் பராமரிப்புப் பணிகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதை அதிகாரிகளே ஒப்புக்கொள்ளும் நிலையில், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெற்று வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத்திவிட்டு, இப்பிரச்சனைக்குத் தொழில்நுட்ப ரீதியாகப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் பாஜகவுக்கு ரிட்டன்.. 25 முக்கிய நிர்வாகிகள் அதிரடி முடிவு.. சைலண்ட்டாக சம்பவம் செய்த நயினார்!!