பிரதமர் மோடி இன்று தமிழக வருகை தருகிறார். பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சித் தலைவர்களை அவர் அறிமுகம் செய்து வைப்பதாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில், சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுவதைப் போல, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றித் தலைவன் வருவதற்கு முன்னே வழக்கம் போல திமுக அரசின் வெற்றுப் புலம்பல் ஒலி தொடங்கி இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தங்களது அத்தனைப் போலிக் குற்றச்சாட்டுகளுக்கும் இந்த ஒரு புகைப்படமே பதில் என்றும் குறிப்பிட்டார். அதைப் பார்த்த பின்பாவது புளித்துப்போன புரட்டுகளைப் பரப்புவதை நிறுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக்கோரி தூய்மைப் பணியாளர்கள் போராடிய வேளையில், அவர்களைக் காணாது திரைப்படம் கண்டு களித்ததை யாராவது மறக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். தினந்தினம் பெண்கள் காமக்கொடூரர்களின் கரங்களில் சிக்கித் தவிக்கும் வேளையில், "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என நாடகம் நடத்தி விளம்பரம் தேடியதை மறக்க முடியுமா என்றும் போதையின் பாதையில் இளைஞர்கள் சீரழியும் போது, போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதைவிட்டு, மேடையில் மட்டும் பாடம் எடுத்த கோரத்தை மறக்க முடியுமா எனவும் கொடுத்த வாக்குறுதியைப் பறக்கவிட்டு பகுதிநேர ஆசிரியர் கண்ணன் உயிரைப் பறித்த கொடூரத்தை தான் மறக்க முடியுமா என்றும் சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: கஞ்சா தமிழகம்... சீரழியும் சமூகம்..! மீண்டும் உங்கள் ஆட்சியா? நயினார் கண்டனம்..!
இப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சியை நடத்திவிட்டு, ஃபோட்டோஷூட்டுக்கு மட்டும் தலைகாட்டும் தங்களின் வெற்று திசைத்திருப்பு ஒப்பாரியைக் கண்டு மக்கள் மாறப்போவதில்லை என சாடினார். இன்னும் எவ்வளவு கதறினாலும் திமுக இனியொருமுறை அரியணை ஏறப்போவதில்லை என்றார் நயினார் நாகேந்திரன்.
இதையும் படிங்க: ஒரு டிக்கெட் ரூ.7,500? நடுத்தர மக்கள் வயித்தெறிச்சல் சும்மா விடாது... நயினார் கண்டனம்..!