2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் NDA கூட்டணி, ஆளும் திமுக அரசுக்கு எதிராக வலுவான எதிர்க்குரலை எழுப்பி, மாற்றத்தை வலியுறுத்தி வருகிறது.
அதிமுகவும் பாஜகவும் மீண்டும் இணைந்து NDA-வை உருவாக்கியதிலிருந்து, கூட்டணி உறுதியான அடித்தளத்தைப் பெற்றது. பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கின. மார்ச் 2026-ல் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இருக்கைப் பங்கீடு இறுதியானது.

அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட, பாஜக 27 தொகுதிகள், பாமக 18, அமமுக 11, தமிழ் மாநில காங்கிரஸ் 5, ஐஜேகே 2 உள்ளிட்ட கட்சிகளுக்கு மீதமுள்ள இடங்கள் ஒதுக்கப்பட்டன. சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு முடிவடைந்ததும், NDA-வின் பரப்புரை தீவிரமடைந்தது.
இதையும் படிங்க: நெல்லை தொகுதியில் களமிறங்கும் அதிமுக..! பாஜக விட்டுக் கொடுத்தது ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்..!!
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை ஆதரித்து 6 மாநில முதலமைச்சர்கள் வாக்கு சேகரிக்க உள்ளனர். யோகி ஆதித்யநாத் (உ.பி), மோகன் யாதவ் (ம.பி), தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரா), பஜன்லால் சர்மா (ராஜஸ்தான்), ஹிமந்த் பிஸ்வ சர்மா (அசாம்) ரேகா குப்தா (டெல்லி) முதலமைச்சர் பரப்புரை செய்ய உள்ளனர். மேலும், ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா உள்ளிட்ட 10 மத்திய அமைச்சர்கள் பரப்புரை செய்ய உள்ளனர். மேலும், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினும் தமிழ்நாட்டில் பரப்புரை செய்ய உள்ளார்.
இதையும் படிங்க: பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!