டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு பெரிய அளவிலான இளைஞர் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட கேள்விப்பட்டியல் கசிவு மற்றும் பிற தேர்வு ஒழுங்கீனங்கள் தொடர்பாக ஏற்பட்ட கோபம் இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஜூன் 6ஆம் தேதியிலிருந்து ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த அமைதியான போராட்டம், பின்னர் பெரிய அளவிலான மோதல்களுடன் தொடர்கிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களில் ஒருவர் கூட, சட்டத்தின் பார்வையில் இருந்து தப்ப முடியாது என பிரதமர் மோடி உறுதியளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளைத் தடுக்க, அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும், முழுக்க முழுக்க “Computer-Based Test” முறையில் நடக்கும் என கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால், கரப்பான் பூச்சி கூட்டத்துடன் இணைந்து இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலவரமாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது எனக் கூறினார்.
இதையும் படிங்க: மின் கட்டண குளறுபடி.. பரிதவிக்கும் மக்கள்.. தமிழ்நாடு அரசுக்கு நயினார் வலியுறுத்தல்..!
எனவே, தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, தேசத்தின் இளைஞர் சக்தியை தவறான வழியில் காங்கிரஸ் கட்சி வழிநடத்தக் கூடாது என்றும் இளைஞர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்க, அரசியல் நிலைப்பாடுகளை தாண்டி அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!