திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள காட்டு பகுதியில் எறிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட காரில் நான்கு பேர் உயிர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்றைய தினம் எறிந்த நிலையில் இருந்த காரின் உள்ளிருந்து நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தகவல் அறிந்த காவல் துறையினர் தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுரங்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் போலீசார் காரின் சேஸ் (Chassis) எண்ணைக் கொண்டு ஆய்வு செய்ததில், அது சென்னை நந்தம்பாக்கம் பெரியார் நகரைச்தைச் சேர்ந்த முகமது ரபி என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இவரது மனைவி பெயர் செய்யது நஸ்ரின் பாத்திமா என்பதும் தெரியவந்தது. முகமது ரபி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த தனது வீட்டை கடன் பிரச்சனை காரணமாக விற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஆத்தங்கரை பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், முகமது ரஃபி தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் இதே காரில் வந்து கலந்து கொண்டது அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் காருக்குள் ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்கிய போது தீப்பற்றி 4 பேரும் எரிந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தன.
இதையும் படிங்க: காரிலேயே கருகிய குடும்பம்... உயிர் போகும் கடைசி நொடியில் தாயைக் கட்டிக்கொண்டு இறந்த பிள்ளைகள்... நெஞ்சை உலுக்கும் சோகம்...!
ஆனால் தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தமிழகத்தையே திடுக்கிட வைத்துள்ளது. அதில் முகமது ரபி மற்றும் அவரது உடல்கள் முழுவதும் தீக்கிரையாகியுள்ளன. இவரது மனைவி செய்யது நஸ்ரின் பாத்திமா மற்றும் மகன் முகமது காஜாவின் உடலில் விஷம் குடித்ததற்கான தடையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நான்கு பேரின் உடல்களும் பாத்திமா நஸ்ரின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு ஆழ்வார் திருநகையில் நல்லடக்கம் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!